/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாயிகள் மனுவிற்கு உரிய பதில் இல்லை நலன் காக்கும் கூட்டத்தில் சரமாரி புகார்
/
விவசாயிகள் மனுவிற்கு உரிய பதில் இல்லை நலன் காக்கும் கூட்டத்தில் சரமாரி புகார்
விவசாயிகள் மனுவிற்கு உரிய பதில் இல்லை நலன் காக்கும் கூட்டத்தில் சரமாரி புகார்
விவசாயிகள் மனுவிற்கு உரிய பதில் இல்லை நலன் காக்கும் கூட்டத்தில் சரமாரி புகார்
ADDED : ஆக 23, 2024 07:45 PM
திருவள்ளூர்:விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுவிற்கு பதில் வருவதில்லை; காட்டு பன்றிகளால் பாதிப்பு ஏற்படுகிறது என, விவசாயிகள் சரமாரி புகார் தெரிவித்தனர்.
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார். விவசாயிகள் பேசியதாவது:
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுவிற்கு பதில் வருவதில்லை. ஒரு துறைக்கு மனு அனுப்பினால், வேறொரு துறையில் இருந்து பதில் வருகிறது.
மனுவை வேளாண் துறை அதிகாரிகள் கவனசமாக பரிசீலனை செய்து, உரிய துறைக்கு அனுப்ப வேண்டும். விவசாய நிலங்களில் காட்டு பன்றிகள் தொல்லை அதிகரித்து உள்ளது. அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:
காட்டுபன்றிகள் விவசாய பயிர்களை நாசம் செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு நிலம், ஏரி, குளம், வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை வருவாய், ஊரக வளர்ச்சி, பொதுப்பணி துறை மற்றும் நில அளவீட்டு துறையினர் ஒருங்கிணைந்து கூட்டு புல தணிக்கை செய்து ஆக்கிரமிப்பு அகற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின், 7 விவசாயிகளுக்கு 3.62 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கினார். கூட்டத்தில், வேளாண் இணை இயக்குனர் முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்- வேளாண்மை, மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

