/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்வாயில் விழுந்து முதியவர் பலி
/
கால்வாயில் விழுந்து முதியவர் பலி
ADDED : மே 03, 2024 08:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி நகராட்சி, மேட்டுத் தெருவில் இருந்து கந்தசாமி தெருவிற்கு செல்லும் என்.எஸ்.சி., போஸ் சாலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து, மழைநீர் வடிகால்வாய் அமைத்தன.
நேற்று முன்தினம் நள்ளிரவில், 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், கால்வாயில் தவறி விழுந்து இறந்துள்ளார். நேற்று காலை சாலை வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.