ADDED : ஆக 14, 2024 11:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அகதியாக வசித்தவர் பழனியய்யா, 71. இலங்கையைச் சேர்ந்தவர். நேற்று முன்தினம் இரவு, கும்மிடிப்பூண்டி சிப்காட் சந்திப்பில் நடந்தபடி சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, சிப்காட் வளாகத்தில் இருந்து வந்த இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்த பழனியய்யா, அதே இடத்தில் உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.