/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆன்-லைனில் லாட்டரி விற்றவர் கைது
/
ஆன்-லைனில் லாட்டரி விற்றவர் கைது
ADDED : ஆக 28, 2024 09:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே, திருத்தணி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகம்படும் படி பள்ளி அருகே ஒருவர் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில், திருத்தணி கச்சேரி தெருவைச் சேர்ந்த மகேந்திரன், 45, என தெரியவந்தது.
மேலும், ஆன்-லைன் மூலம் பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் லாட்டரி விற்பனை செய்து வந்தது தெரிந்தது. போலீசார் மகேந்திரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.