/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டை பஸ் நிலைய சீரமைப்பு பணி துவக்கம்
/
ஊத்துக்கோட்டை பஸ் நிலைய சீரமைப்பு பணி துவக்கம்
ADDED : ஆக 18, 2024 11:04 PM

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அரசு பேருந்து பணிமனையில் இருந்து சென்னை கோயம்பேடு, செங்குன்றம், திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர், புத்துார், திருப்பதி, நெல்லுார், சூளூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு, 35 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்துகள் பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் சென்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். மேலும், தனியார் பேருந்துகளும் இங்கு சென்று வருகின்றன.
இந்த பேருந்து நிலையத்தின் வளாகம் சேதம் அடைந்து காணப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கும். பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படும். இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து சேதம் அடைந்த பகுதியை சீரமைக்க பேரூராட்சியின் பொது நிதியில் இருந்து 5.40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டு சீரமைப்பு பணி துவங்கியது.

