/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டையில் பஸ் நிறுத்தம் திறப்பு
/
ஊத்துக்கோட்டையில் பஸ் நிறுத்தம் திறப்பு
ADDED : ஆக 21, 2024 08:54 PM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சி, திருவள்ளூர் சாலையில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேனிலைப் பள்ளிகள், மின்வாரிய அலுவலகம், திருமண மண்டபங்கள் உள்ளன.
இங்கிருந்து மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் உள்ள கலெக்டர், எஸ்.பி., வேளாண்மை, பொதுப்பணி உள்ளிட்ட முக்கிய அரசு துறை அலுவலகங்கள் செல்ல திருவள்ளூர் செல்லும் மக்கள், பஸ்சிற்காக திருவள்ளூர் சாலையில் காத்திருக்கும் நிலை உள்ளது.
எனவே, திருவள்ளூர் சாலையில் பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி தி.மு.க.,- எம்.எல்.ஏ., கோவிந்தராஜன், தன் தொகுதி மேம்பாட்டு நிதி வாயிலாக 10 லட்சம் ரூபாயில் அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி அருகே பஸ் நிறுத்தம் புதிதாக அமைக்கப்பட்டது. பணிகள் முடிந்து நேற்று இதன் துவக்க விழா நடந்தது.