/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குப்பம்கண்டிகையில் மேல்நிலை தொட்டி திறப்பு
/
குப்பம்கண்டிகையில் மேல்நிலை தொட்டி திறப்பு
ADDED : ஆக 25, 2024 01:41 AM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் குப்பம்கண்டிகை ஊராட்சி கருமாரியம்மன் கோவில் தெருவில், 150 குடும்பங்கள் வசிக்கின்றன.
இப்பகுதி வாசிகளின் குடிநீர் தேவைக்காக 30 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.
இந்த தொட்டி பழுதடைந்த நிலையில் அதை சீரமைக்க வேண்டும் என ஒன்றிய சேர்மன் ஜீவா விஜயராகவனிடம் அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து 2023-- -24ம் ஆண்டுக்கான 15வது நிதிக் குழு மான்யத்தில், 17 லட்சத்து 66 ஆயிரத்து 156 ரூபாய் மதிப்பில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
பணி முடிந்த நிலையில் நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஒன்றிய சேர்மன் திறந்து வைத்தார்.

