/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புறக்காவல் நிலையம் எதிரே 'குடி'மகன்கள் அட்டகாசம்
/
புறக்காவல் நிலையம் எதிரே 'குடி'மகன்கள் அட்டகாசம்
ADDED : ஆக 25, 2024 11:14 PM

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் போஸ்ட் ஆபீஸ் தெருவில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
மேலும், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்திலும் காவல் நிலையம் அமைந்துள்ளது.
இதுதவிர, சோளிங்கரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில், புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த புறக்காவல் நிலையத்தில், குறிப்பாக வாகன தணிக்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களை போலீசார் தணிக்கை செய்து குற்ற சம்பவங்களை தடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த புறக்காவல் நிலையத்தின் எதிரே திரவுபதியம்மன் கோவிலை ஒட்டி, பழமையான குளம் ஒன்று அமைந்துள்ளது.
இந்த குளக்கரையில், வியாபாரிகள் சிலர் ஆக்கிரமித்து சாலையோர கடைகளை நடத்தி வருகின்றனர்.
இரவு நேரத்தில் இந்த கடைகளுக்கு பின்புறம் 'குடி'மகன்கள் மது அருந்துகின்றனர். காலி பாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர்.
இதனால், குளக்கரை மற்றும் குளத்து நீர் மாசடைந்து வருகிறது. இந்த பகுதியில் செயல்பட்டு வரும் கடைகளை அப்புறப்படுத்தி, குளக்கரையை சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.