/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊசலாடும் சிக்னல் 'லைட்' யார் தலையில் விழுமோ?
/
ஊசலாடும் சிக்னல் 'லைட்' யார் தலையில் விழுமோ?
ADDED : மே 26, 2024 09:28 PM

பெரியபாளையம்: சென்னை --- திருப்பதி மாநில நெடுஞ்சாலையில் உள்ளது பெரியபாளையம் ஊராட்சி. இங்கு 3,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம், நாகலாபுரம், பிச்சாட்டூர், நகரி, புத்துார், ரேணிகுண்டா, திருப்பதி, கடப்பா, கர்நுால், ஹைதராபாத், நந்தியால் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் பெரியபாளையம் வழியே செல்கின்றன.
தினமும் இச்சாலையில், 15,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.
போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலையில், நெரிசலை கட்டுப்படுத்த பேருந்து நிலையம் அருகில், பஜார் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டது.
துவக்கத்தில் இருந்தே பயன்பாட்டிற்கு வராமல் காட்சிக் பொருளாகவே இருந்தது.
தற்போது இந்த தானியங்கி சிக்னலில் உள்ள, 'லைட்' தொங்கியபடி எப்போது கீழே விழுமோ என்ற நிலையில் உள்ளது.
இந்த, 'லைட்' கீழே விழுந்து யார் தலையை பதம் பார்க்குமோ என்ற நிலையில் உள்ளது. எனவே, மாவட்ட காவல் துறை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

