நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி:ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் அஜய்குமார், 27; பெயின்டர். இவரது மனைவி ஜோதி, 24. அஜய்குமார் அதீத மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால், தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஜோதி அவரை பிரிந்து, அருகில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
மனைவி பிரிந்த சோகத்தில் விரக்தி அடைந்த அஜய்குமார், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமுல்லைவாயில் போலீசார் விசாரிக்கின்றனர்.