/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காட்சி பொருளான நிழற்குடை பள்ளிப்பட்டு பயணியர் வேதனை
/
காட்சி பொருளான நிழற்குடை பள்ளிப்பட்டு பயணியர் வேதனை
காட்சி பொருளான நிழற்குடை பள்ளிப்பட்டு பயணியர் வேதனை
காட்சி பொருளான நிழற்குடை பள்ளிப்பட்டு பயணியர் வேதனை
ADDED : மார் 02, 2025 11:42 PM

பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு பேரூராட்சியில், 25,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பள்ளிப்பட்டு நகரை ஒட்டி, ஆந்திர மாநில எல்லை துவங்குகிறது.
பள்ளிப்பட்டு சுற்றுவட்டார தமிழக கிராமத்தினரும், ஆந்திர மாநில கிராமத்தினரும் தினமும் தங்களின் அன்றாட தேவைகளுக்காக, இங்கு வந்து செல்கின்றனர்.
இதனால், பள்ளிப்பட்டில் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். பள்ளிப்பட்டு நகரில், நகரி கூட்டுச்சாலை அருகே, காவலர் குடியிருப்பு எதிரே நிழற்குடை கட்டப்பட்டுள்ளது.
அந்த வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாய் மீது நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நிழற்குடையை பராமரிக்காததால், சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள நிழற்குடையின் தரைதளமும் இடிந்துள்ளது.
இதனால், பயணியர் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, நிழற்குடையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.