/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இடவசதி இல்லாத பஸ் நிலையம் பொன்னேரியில் பயணியர் தவிப்பு
/
இடவசதி இல்லாத பஸ் நிலையம் பொன்னேரியில் பயணியர் தவிப்பு
இடவசதி இல்லாத பஸ் நிலையம் பொன்னேரியில் பயணியர் தவிப்பு
இடவசதி இல்லாத பஸ் நிலையம் பொன்னேரியில் பயணியர் தவிப்பு
ADDED : மார் 05, 2025 01:54 AM

பொன்னேரி:பொன்னேரி பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம், மாதவரம், பழவேற்காடு, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் என, தினமும் 60க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொன்னேரி நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இங்கு, பயணியருக்கு போதிய வசதிகள் இல்லை. இங்குள்ள நிழற்குடையில் குறைந்த அளவிலான இருக்கைகளே இருப்பதால், பெரும்பாலான பயணியர் நின்று கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறுகிய இடத்தில் அதிகமான பயணியர் காத்திருக்கும்போது கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், பேருந்திற்கு காத்திருக்கும் பயணியர் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். மேலும், பேருந்து நிலைய வளாகத்தில் குறைந்த அளவிலான மின்விளக்குகள் உள்ளதால், இரவு நேரங்களில் பயணியர் அச்சம் அடைகின்றனர். வளாகமும் குப்பை, கழிவுகளுடன் பராமரிப்பு இன்றி உள்ளது.
பேருந்து நிலைய வளாகத்தில், கூடுதல் இருக்கை வசதிகளுடன் கூடிய நிழற்குடைகள் அமைக்கவும், தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவும், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.