/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையோரம் கழிவுநீர் துர்நாற்றத்தால் பயணியர் அவதி
/
நெடுஞ்சாலையோரம் கழிவுநீர் துர்நாற்றத்தால் பயணியர் அவதி
நெடுஞ்சாலையோரம் கழிவுநீர் துர்நாற்றத்தால் பயணியர் அவதி
நெடுஞ்சாலையோரம் கழிவுநீர் துர்நாற்றத்தால் பயணியர் அவதி
ADDED : மே 26, 2024 09:24 PM

செவ்வாப்பேட்டை: திருவள்ளூரிலிருந்து தண்ணீர்குளம், தொழுவூர், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு வழியாக ஆவடி செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.
இந்த சாலை வழியே தினமும் அரசு, தனியார், தொழிற்சாலை, பள்ளி, கல்லுாரி பேருந்து, கனரக வாகனம் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நெடுஞ்சாலையில் தொழுவூர் பகுதியில் சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாய் பகுதி குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது.
குப்பையுடன் கழிவுநீர் தேங்கி நிற்பதால் ஏற்படும் துர்நாற்றத்தால் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் இந்த குப்பையில் கால்நடைகள் இரை தேடுவதால் ஏற்படும் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டப்படுவதை தடுக்கவும், குப்பையை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

