/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பு இல்லாத அனுப்பம்பட்டு ரயில் நிலையம்
/
பராமரிப்பு இல்லாத அனுப்பம்பட்டு ரயில் நிலையம்
ADDED : ஆக 18, 2024 11:06 PM

பொன்னேரி: சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ள அனுப்பம்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து, ஆயிரக்கணக்கான பயணியர் புறநகர் ரயில்களில் பயணிக்கின்றனர்.
நடைமேடையை ஒட்டி உள்ள பகுதி முழுதும் புதர் மண்டி, அதிலிருந்து விஷ ஜந்துக்கள் அவ்வப்போது பயணியரை அச்சுறுத்துகின்றன.
சுகாதார வளாகம் பூட்டியே கிடப்பதால், அவரச உபாதைகளின்போது, பயணியர் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். அதேபோன்று பயணியர் இருக்கைகளும் தாழ்வாக இருக்கிறது. வயதானவர்கள் அதில் அமர்ந்து, பின் எழும்போது பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். நடைமேடை கூரைகளும் சேதம் அடைந்தும், இரும்பு தகடுகள் துருப்பிடித்தும் இருக்கின்றன.
மேட்டுப்பாளையம் - அனுப்பம்பட்டு சாலையில் இருந்து, ரயில் நிலையம் செல்லும் பாதையும் புதர் மண்டி இருக்கிறது. இரவு நேரங்களில் இந்த பாதை வழியாக பயணிக்கும் பயணியர் அச்சத்திற்கு ஆளாகின்றனர்.
அனுப்பம்பட்டு ரயில் நிலையத்தில் உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

