/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.5 லட்சத்தில் சிறுபாலம் தலக்காஞ்சேரி மக்கள் மகிழ்ச்சி
/
ரூ.5 லட்சத்தில் சிறுபாலம் தலக்காஞ்சேரி மக்கள் மகிழ்ச்சி
ரூ.5 லட்சத்தில் சிறுபாலம் தலக்காஞ்சேரி மக்கள் மகிழ்ச்சி
ரூ.5 லட்சத்தில் சிறுபாலம் தலக்காஞ்சேரி மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 31, 2024 10:11 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி, காமராஜர் சாலையில் இருந்து தலக்காஞ்சேரி சாலை வழியாக, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட இச்சாலையில், நகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. மேலும், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
மழை காலத்தில் புல்லரம்பாக்கம், தலக்காஞ்சேரி ஏரி உபரி நீர் செல்வதற்காக, தலக்காஞ்சேரி சாலை, தனியார் பள்ளி அருகில் சிறிய அளவிலான சிமென்ட் குழாய் வழியாக தண்ணீர் வெளியேறுகிறது. குறுகலாக இருப்பதால், மழைநீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி விடுகிறது.
இதையடுத்து, இந்த சிமென்ட் குழாயை அகற்றி, சிறு பாலம் கட்ட வேண்டும் என, அப்பகுதிவாசிகள் நகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இதை தொடர்ந்து, தலக்காஞ்சேரி சாலையில் சிறு பாலம் அமைக்க, நகராட்சி நிர்வாகம் 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.