/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்கள் குறைதீர் கூட்டம் 425 மனுக்கள் ஏற்பு
/
மக்கள் குறைதீர் கூட்டம் 425 மனுக்கள் ஏற்பு
ADDED : செப் 02, 2024 11:12 PM

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்குகளில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக 144, சமூக பாதுகாப்பு திட்டம் 87, வேலைவாய்ப்பு வேண்டி 43, பசுமைவீடு, அடிப்படை வசதி கேட்டு 65, இதர துறை 86 என மொத்தம் 425 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு 5.28 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன செயற்கை உறுப்புகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பயனாளி ஒருவருக்கு, மனு வழங்கிய சில நிமிடங்களிலேயே 6,690 ரூபாய் மதிப்பிலான தையல் இயந்திரம் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயகுமார், பயிற்சி கலெக்டர் ஆயுஷ் குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.