/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மெய்யூர் கூட்டுறவு சங்க செயலரை மாற்ற மனு
/
மெய்யூர் கூட்டுறவு சங்க செயலரை மாற்ற மனு
ADDED : மார் 04, 2025 07:23 PM
ஊத்துக்கோட்டை:மெய்யூர் கிராமத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் பொறுப்பு செயலராக பணியாற்றி வருபவர் ஊழல் செய்வதால், அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என, அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கலெக்டர் பிரதாப்பிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
மெய்யூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் பொறுப்பு செயலராகபணியாற்றி வருபவர் அலுவலகத்திற்கு குறித்த நேரத்திற்கு வருவதில்லை. பெரும்பாலான நாட்கள் மூடியே உள்ளது. இங்கு, இ - சேவை மையம் செயல்படுவதால், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
செயலரின் மகன், அவரது சகோதரர் மகன்கள் ஆகியோர், கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் இணைப்பை சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்துகின்றனர். கடன் கேட்டு வரும் விவசாயிகளுக்கு, முறையான தகவல் தருவதில்லை. கடன் கொடுப்பதிலும் இழுத்தடிக்கிறார்.
செயலரின் உறவினர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படுகிறது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து, பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.