/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழைய பி.டி.ஓ., அலுவலக கட்டடம் இடித்து அகற்றம்
/
பழைய பி.டி.ஓ., அலுவலக கட்டடம் இடித்து அகற்றம்
UPDATED : பிப் 18, 2025 07:31 AM
ADDED : பிப் 17, 2025 11:16 PM

திருவாலங்காடு,திருவாலங்காடில் பி.டி.ஓ., அலுவலகம் 1965ம் ஆண்டு திருவள்ளூர் - அரக்கோணம் நெடுஞ்சாலையில், அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே கட்டப்பட்டது. இந்த கட்டடம் பழுதடைந்ததால் அதன் அருகே 2015ம் ஆண்டு புதிய பி.டி.ஓ., அலுவலக கட்டடம் கட்டடப்பட்டது.
தற்போது அலுவலகம் புதிய கட்டடத்தில் இயங்கும் நிலையில் பழைய கட்டடம் உறுதி தன்மை இழந்து கூரை சேதமடைந்து அவ்வப்போது உதிர்ந்து வருகிறது. கட்டடம் பயன்பாடின்றி விடப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகும் நிலையில் இதுவரை அகற்றப்படவில்லை.
எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற நிலையில் உள்ள கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என நம் நாளிதழில் கடந்தாண்டு நவம்பரில் செய்தி வெளியானது.
இதையடுத்து கடந்த மாதம் இடிக்க டெண்டர் விடப்பட்டு நேற்று முன்தினம் முதல் கட்டடம் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் இடிக்கப்பட்டு வருகிறது.