/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க: மாணவியர் கதறல் 'ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க' மாணவியர் அலறல்
/
ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க: மாணவியர் கதறல் 'ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க' மாணவியர் அலறல்
ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க: மாணவியர் கதறல் 'ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க' மாணவியர் அலறல்
ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க: மாணவியர் கதறல் 'ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க' மாணவியர் அலறல்
ADDED : செப் 11, 2024 01:28 AM

பொன்னேரி:பொன்னேரி, வேண்பாக்கம் பகுதியில் ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆறு முதல், பிளஸ் 2 வரை, 1,500 மாணவியர் படிக்கின்றனர்.
இங்குள்ள மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதிகள் இல்லை. குறைந்த அளவில் இருப்பதால் அவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். ஒரு கழிப்பறையை, 80 - 100 மாணவியர் பயன்படுத்தும் நிலை உள்ளது.
பள்ளி இடைவேளையின்போது, அத்தனை மாணவியரும் கழிப்பறை சென்று, நேரத்திற்குள் வகுப்பறை திரும்ப முடியாத நிலையில், பெரும்பாலானவர்கள் உடல் உபாதைகளை கழிக்காமல் இருந்து விடுகின்றனர். இதனால் அவர்கள் உடல்நல பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றனர்.
இந்நிலையில், பள்ளியில் வைக்கப்பட்டுள்ள 'மாணவர் மனசு ' என்ற புகார் பெட்டியில் மாணவியர், இதுதொடர்பாக பல்வேறு குறைகளை வேதனையுடன் கடிதமாக எழுதி போட்டு உள்ளனர்.
அதில், 'கழிப்பறை கதவுகள் எல்லாம் உடைஞ்சு இருக்கு, கம்பளிப்பூச்சிகள் உள்ளே இருக்குது, குழாய்கள் உடைந்து இருக்கு, தண்ணீர் வருவதில்லை, பக்கெட்கள் உடைந்து ஒன்றிரண்டுதான் இருக்கு, கழிப்பறைகளை சரியாக கழுவறதே இல்லை, ஸ்மெல் வருது. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க' என எழுதி உள்ளனர்.
மாணவர்களின் வேதனையை நேரிடையாக பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்க முடியாத நிலையில், கடிதமாக எழுதி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப இப்பள்ளியில் கூடுதல் கழிப்பறைகளை அமைத்து தரவேண்டும் எனுவும், சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் எனவும் தொடர்ந்து பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.
இப்பள்ளி வளாகத்தில், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் அமைந்திருந்தும், மாணவியரின் இன்னலுக்கு தீர்வு இல்லாமல் இருப்பது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக பள்ளியை ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.