/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிளஸ் 2 பொதுத்தேர்வு: 345 பேர் 'ஆப்சென்ட்'
/
பிளஸ் 2 பொதுத்தேர்வு: 345 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 04, 2025 01:05 AM

திருவள்ளூர், திருவள்ளுர் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு நேற்று தமிழ் தேர்வுடன் துவங்கியது. திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி தேர்வு மையத்தில் நேற்று கலெக்டர் பிரதாப் பார்வையிட்டார். முதன்மை கல்வி அலுவலர் ரவிசந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்-பள்ளிக் கல்வி பவானி உள்பட பலர் பங்கேற்றனர்.
பின், கலெக்டர் பிரதாப் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில், 109 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கிறது. முதல் நாள் மொழிப்பாட தேர்வில் 27,836 பேரில், 27,554 பேர் தேர்வு எழுதினர். 282 மாணவர்கள் தேர்வில் பங்கு பெறவில்லை.
அதே போல, 600 தனித்தேர்வர்களில், 537 பேர் பங்கேற்றனர். இவர்களில் 63 பேர் பங்குபெறவில்லை.
ஒட்டு மொத்தமாக, 345 பேர் தேர்வு எழுதவில்லை. இதைத்தவிர, 207 மாணவர்களுக்கு, தேர்வு எழுதுவோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில் 18 பேர் தேர்வு எழுதினர்.
அதில், எம்.ஆனந்த் என்ற மாணவர், கணினி மூலம் தேர்வு எழுதினார். வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து, 27 வழித்தட அலுவலர்கள், ஆயுதம் தாங்கிய காவலர் உதவியுடன் வாகனம் வாயிலாக, அனைத்து தேர்வு மையங்களுக்கும், ஐந்து வினாத்தாள் கட்டுகள் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டன.
மாணவர்களுக்கு தேவையான குடிநீர், தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், தேர்வு மையத்திற்கு செல்வதற்கு பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.