/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆட்டோ ஸ்டாண்ட் இல்லாததால் போலீஸ் கெடுபிடி; ஓட்டுநர்கள் அவதி
/
ஆட்டோ ஸ்டாண்ட் இல்லாததால் போலீஸ் கெடுபிடி; ஓட்டுநர்கள் அவதி
ஆட்டோ ஸ்டாண்ட் இல்லாததால் போலீஸ் கெடுபிடி; ஓட்டுநர்கள் அவதி
ஆட்டோ ஸ்டாண்ட் இல்லாததால் போலீஸ் கெடுபிடி; ஓட்டுநர்கள் அவதி
ADDED : மார் 09, 2025 11:58 PM
திருவாலங்காடு, திருவள்ளூர் --- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் திருவாலங்காடு அமைந்துள்ளது.
இங்கு, 15,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும், சுற்றுவட்டாரத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராம வாசிகள் திருவாலங்காடு, மணவூர் ரயில் நிலையங்கள் செல்வதற்கும், திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கும், பொது போக்குவரத்து வசதி அதிகம் இல்லாததால் ஆட்டோக்களை நம்பியே உள்ளனர்.
தற்போது, திருவாலங்காடில் இருந்து இப்பகுதிகளுக்கு செல்ல 35க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் தேரடி பகுதியில் இருந்து இயக்கப்படுகின்றன. ஆனால், அங்கு ஆட்டோ ஸ்டாண்ட் இல்லாததால், சாலையோரத்தில் நிறுத்தி இயக்கி வருகின்றனர்.
இதனால், போலீஸ் கெடுபிடி உள்ளதுடன், வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளதாக, வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் கூறியதாவது:
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ நிறுத்தி இயக்கப்பட்டு வந்த இடங்களில், சில மாதங்களாக தற்காலிக கடைகளை அமைத்தும், சைக்கிள், தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்து வருவதால், ஆட்டோ நிறுத்த இடமின்றி சிரமமாக உள்ளது.
இதனால் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, ஊராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க இடம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.