/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயிரை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் பொன்னேரி விவசாயிகள் கவலை
/
பயிரை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் பொன்னேரி விவசாயிகள் கவலை
பயிரை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் பொன்னேரி விவசாயிகள் கவலை
பயிரை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் பொன்னேரி விவசாயிகள் கவலை
ADDED : ஆக 26, 2024 11:06 PM

பொன்னேரி: பொன்னேரி அடுத்த பெரும்பேடு, தேவராஞ்சேரி ஆசானபூதுார், மடிமைகண்டிகை, மெதுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில சொர்ணவாரி பருவத்திற்கு நெல் பயிரிடப்பட்டது.
சீரான இடைவெளியில் மழை பொழிவு இருந்ததால், நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளன. இந்நிலையில், கடந்த சில தினங்களாக, கூட்டம் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள், நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
விளைநிலங்களில் கூட்டமாக புகுந்து, நெற்பயிர்களை கடித்து சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
இரவு நேரங்களில் பெரும்பேடு ஏரிக்குள் இருந்து வெளிவரும் காட்டுப்பன்றிகள் நெற்பயிர்களை சேதப்படுத்துகின்றன.
அடுத்த சில தினங்களில் அறுவடை செய்ய திட்டமிட்டு உள்ளோம். காட்டுப்பன்றிகளின் தொல்லையால், நெற்பயிர்கள் சேதம் அடைந்து, அறுவடையின்போது மகசூல் பாதிப்பு, வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை வனத்துறை மற்றும் வேளாண்மைத்துறையினர் மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.