/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூர் - மணலி நெடுஞ்சாலையில் மழைநீர் கால்வாய் பராமரிப்பு மோசம்
/
மீஞ்சூர் - மணலி நெடுஞ்சாலையில் மழைநீர் கால்வாய் பராமரிப்பு மோசம்
மீஞ்சூர் - மணலி நெடுஞ்சாலையில் மழைநீர் கால்வாய் பராமரிப்பு மோசம்
மீஞ்சூர் - மணலி நெடுஞ்சாலையில் மழைநீர் கால்வாய் பராமரிப்பு மோசம்
ADDED : ஜூலை 30, 2024 06:40 AM

மீஞ்சூர்: மீஞ்சூர் - மணலி மாநில நெடுஞ்சாலையில் வல்லுார், கவுண்டர்பாளையம், கொண்டக்கரை, இடையன்சாவடி உள்ளிட்ட பகுதிகளில், சாலையின் இருபுறமும் மழைநீர் செல்வதற்கான கால்வாய்கள் உரிய பராமரிப்பின்றி உள்ளன.
கால்வாய்களின் மூடிகள் சேதமடைந்து திறந்த நிலையில் இருப்பதுடன், அவற்றில் குப்பை, கழிவுகள் கொட்டி குவிக்கப்பட்டு உள்ளன.
அங்கு கொட்டப்படும் இறைச்சி கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. குப்பை கழிவுகளால் கால்வாய் துார்ந்து கிடப்பதால், மழைக்காலங்களில் மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் மற்றும் மாநில நெடுஞ்சாலையில் வழிந்தோடும் மழைநீர், இந்த கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆற்றிற்கு செல்ல வேண்டும்.
கால்வாய் பராமரிப்பு இன்றி துார்ந்து கிடப்பதால், கடந்தாண்டு மழையின்போது கவுண்டர்பாளையம், கொண்டக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மழைநீர் வெளியேற வழியின்றி குடியிருப்புகளை சூழ்ந்தது.
மாநில நெடுஞ்சாலையிலும் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பெரும் இன்னலுக்கு ஆளாகினோம். தற்போது வரை கால்வாய்கள் சீரமைக்கப்படாமல் உள்ளன.
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், கடந்தாண்டை போல பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க, மழைநீர் கால்வாய்களை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.