/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாலத்தை ஒட்டி தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்
/
பாலத்தை ஒட்டி தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்
ADDED : ஜூலை 03, 2024 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே மாநெல்லுார் கிராமத்தில் இருந்து பல்லவாடா கிராமம் நோக்கி செல்லும் சாலையின்இடையே பாலம் ஒன்று உள்ளது.
அந்த பாலத்தை ஒட்டி தொங்கியபடி தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் அவ்வழியாக கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
அந்த மின் கம்பிகள் காற்றில் ஆடும் போது, பாலத்தில் செல்லும் வாகனங்கள் மீது உரச வாய்ப்புள்ளது என வாகன ஓட்டிகள் அஞ்சுகின்றனர்.
மாதர்பாக்கம் துணை மின் நிலையத்தினர், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.