/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்சப்ளை நிறுத்தம்: திருவள்ளூர்
/
மின்சப்ளை நிறுத்தம்: திருவள்ளூர்
ADDED : ஜூன் 18, 2024 10:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம் ஒரத்தூர், எல்.வி.புரம், பாகசாலை ஆகிய கிராமங்களில், 1,000த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இந்த மூன்று கிராமங்களில் சில நாட்களாக இரவு நேரத்தில் முன் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது.
மேலும் ஊராட்சியில் மின்மோட்டார்களை இயக்க முடியாததால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த இடியுடன் பெய்த பலத்த மழையால் நள்ளிரவு, 11:30 மணிக்கு ஏற்பட்ட மின்தடை நேற்று மாலை, 6:00 மணி வரை நீடித்தது.