/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிரதமரின் ஆலோசகர் திருத்தணியில் தரிசனம்
/
பிரதமரின் ஆலோசகர் திருத்தணியில் தரிசனம்
ADDED : மே 23, 2024 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, இந்திய பிரதமரின் அறிவியல் ஆலோசகர் டாக்டர் சதீஷ் ரெட்டி, நேற்று மாலை திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்தார்.
அப்போது, திருத்தணி கோவில் அறங்காவலர் சுரேஷ்பாபு, திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தமிழ்மாறன், இன்ஸ்பெக்டர் மதியரசன் ஆகியோர் சதீஷ்ரெட்டியை வரவேற்றனர்.
பின், ஆபத்சகாய விநாயகர், சண்முகர், மூலவர், வள்ளி, தெய்வானை மற்றும் உற்சவர் முருகப்பெருமான் ஆகிய சன்னிதிகளில் சிறப்பு பூஜை நடத்தி, சதீஷ் ரெட்டி சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் சதீஷ் ரெட்டிக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

