/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல்
/
கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல்
கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல்
கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : ஆக 07, 2024 02:42 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள, பொதுப்பணித் துறை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளதால், மழை காலத்தில் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட டோல்கேட், கலெக்டர் அலுவலகம் பகுதியில் இருந்து, சி.வி.நாயுடு சாலை, தெற்கு குளக்கரைச் சாலை வழியாக, ராஜாஜி சாலை பேருந்து நிலையம் பின்புறம் பொதுப்பணித் துறை கால்வாய் உள்ளது.
இப்பகுதியில் வெளியேறும் மழைநீர், இந்த கால்வாய் வழியாக காக்களூர் ஏரிக்கு செல்லும் வகையில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கால்வாய் முறையாக பராமரிக்காததால், சில இடங்களில் ஆக்கிரமிப்பால் கால்வாய் சுருங்கி விட்டது.
மேலும், கால்வாயில் சி.வி.நாயுடு சாலையில் இருந்து பேருந்து நிலையம் வரை, குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.
இதனால், கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறாமல், சாக்கடையாக மாறி தேங்கி உள்ளது.
இதன் காரணமாக, மழை நீர் கால்வாய் வழியாக காக்களூர் ஏரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டுகளில், வடகிழக்கு பருவமழை காலத்தில் கால்வாயில் தண்ணீர் வெளியேற வழியின்றி, குடியிருப்பு பகுதிகளில் குளம்போல் தேங்கி விடுவதால், குடியிருப்புவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இன்னும் சில மாதங்களில், வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அதற்குள் கால்வாயை துார் வாரி, கழிவுகளை அகற்ற பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.