/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கரடிபுத்துாரில் ஆர்ப்பாட்டம்
/
குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கரடிபுத்துாரில் ஆர்ப்பாட்டம்
குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கரடிபுத்துாரில் ஆர்ப்பாட்டம்
குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கரடிபுத்துாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 25, 2025 12:15 AM

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அடுத்த, கரடிபுத்துார் கிராமத்தில், கள்ளாங்குத்து வகையைச் சேர்ந்த, ஐந்து ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த நிலத்தில், அரசு பணிகளுக்காக தனியாருக்கு கிராவல் குவாரி விடப்பட்டது.
ஏற்கனவே கரடிபுத்துார் கிராமத்தில் குவாரி விடக்கூடாது என, கிராம சபை கூட்டங்களில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதிதாக விடப்பட்ட குவாரியில் கிராவல் மண் எடுக்க வந்த பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரிகளை கிராமத்தினர் சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குவாரி எடுப்பவர்கள் விதிகள் மீறி செயல்படுவதால், கிராமத்தின் வளம் சூறையாடப்படுவதாக கிராமத்தினர் தெரிவிக்கின்றனர். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில், பந்தலிட்டு தொடர் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள மக்கள் முடிவு செய்தனர்.
தகவல் அறிந்து சென்ற பாதிரிவேடு போலீசார், பந்தல் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி மக்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது, கிராம மக்களுக்கும் குவாரி எடுக்க வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சூழலின் விபரீதம் அறிந்து குவாரி எடுக்க வந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மாவட்ட நிர்வாகத்திடம் கிராமத்தினர் மனு கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை குவாரி தற்காலிக நிறுத்தப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.அதன்பின், பொக்லைன், லாரிகளை விடுவித்து, கிராமத்தினர் கலைந்து சென்றனர்.