/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
/
நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : ஆக 06, 2024 10:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து, 6 பேருக்கு தலா 1,500 ரூபாய் மதிப்பில் மூக்கு கண்ணாடி, இருவருக்கு தலா 5, 000 ரூபாய் மதிப்பில் திருமண நிதி உதவி; 9 பேருக்கு தலா 1,500 ரூபாய் மதிப்பில் கல்வி நிதி, இருவருக்கு தலா 25,000 ரூபாய் மதிப்பில் இயற்கை மரணம் நிதி உதவி என, 19 நாட்டுப்புற கலைஞர்களுக்கு 80,000 ரூபாய்க்கும் அதிகமான நல திட்ட உதவி வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் நீலமேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.