ADDED : ஆக 14, 2024 09:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி,:திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை அரசினர் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு ஆனந்தரசன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன் வரவேற்றார். இதில், திருத்தணி தி.மு.க.,-- - எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று, 91 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.