/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு
/
மக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு
ADDED : மார் 05, 2025 02:31 AM
திருவள்ளூர்;தனியார் கம்பெனி விரிவாக்கம் செய்வதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள, 'ஏ.ஆர்.எஸ். ஸ்டீல்ஸ் அண்டு அலாய் இண்டர்நேஷனல் பிரைவேட் லிட்.,' தொழிற்சாலையின் விரிவாக்கம் தொடர்பாக, கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று நடைபெறுவதாக இருந்தது.
தவிர்க்க முடியாத காரணங்களால், இந்த கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
கருத்து கேட்பு கூட்டத்திற்கான புதிய நாள், நேரம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.