/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதுச்சேரிமேடு சாலை மோசம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
புதுச்சேரிமேடு சாலை மோசம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
புதுச்சேரிமேடு சாலை மோசம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
புதுச்சேரிமேடு சாலை மோசம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : மே 16, 2024 12:35 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த தொட்டிமேடு - புதுச்சேரிமேடு கிராமங்களுக்கு இடையே உள்ள சாலை சரளை கற்கள் பெயர்ந்தும், குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயகற்ற நிலையில் உள்ளது.
பெயர்ந்து கிடக்கும் சரளை கற்களில் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். சாலை முழுதும் புழுதி பறக்கிறது. இரவு நேரங்களில் பள்ளங்களில் விழுந்து சிறு சிறு விபத்துகளுக்கு உள்ளாகின்றனர்.
பேருந்து போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், கிராமவாசிகள் இருசக்கர வாகனங்களையே நம்பி உள்ளனர். சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆளாவதுடன், வாகனங்களின் உதிரிபாகங்களும் சேதம் அடைகின்றன.
அவரச மருத்துவ சிகிச்சை செல்பவர்களும் சிரமப்படுகின்றனர். மேற்கண்ட சாலையை புதுபிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.