/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தரமான சாலை, பாதாள சாக்கடை வசதி: கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்
/
தரமான சாலை, பாதாள சாக்கடை வசதி: கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்
தரமான சாலை, பாதாள சாக்கடை வசதி: கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்
தரமான சாலை, பாதாள சாக்கடை வசதி: கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்
ADDED : ஜூலை 31, 2024 02:52 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி கூட்டம், தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. துணை தலைவர் ரவிச்சந்திரன், கமிஷனர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
பெரியகுப்பம் சோழன் தெருவில், தரமான தார்ச்சாலை அமைக்க வேண்டும். நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களுக்கு இனப்பெருக்க தடுப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
வீரராகவர் கோவில் அருகில், வாகனங்கள் நிறுத்தப்படுவதால் ஏற்படும் நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள கால்வாயை மழை காலத்திற்குள் துார் வார வேண்டும்.
பெரியகுப்பம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அமைக்கப்பட்ட பூங்காவில் மழைநீர் தேங்கியதால், நடைபயிற்சி மேற்கொள்வோர் சிரமப்படுகின்றனர். மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொண்டமாபுரம் தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, மழை காலத்தில் தெரு முழுதும் தேங்கி விடுவதால், அதை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.
கவுன்சிலர்களின் குறைகள் தீர்வு காணப்படும் என, நகராட்சி தலைவர் உறுதி அளித்தார். கூட்டத்தில், பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து, 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், பொறியாளர் நடராஜன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், வருவாய் அலுவலர் கருமாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.