/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையுடன் மீட்பு
/
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையுடன் மீட்பு
ADDED : ஆக 01, 2024 11:45 PM
அரக்கோணம்:சென்னை -சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 3:30 மணிக்கு புறப்பட்டது.
முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் பயணச்சீட்டு சோதனையில் ஈடுபட்டிருந்த போது மனநலம் பாதிக்கப்பட்ட பெயர் பெண் 2 வயது குழந்தையுடன் இருந்தார்.
டிக்கெட் பரிசோதகர் அரக்கோணம், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த போது மனநல பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குழந்தைகளை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
போலீசார் விசாரித்தனர். அவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நாராயண் மனைவி சுமான் 30 என தெரிந்தது.
போலீசார், பெண் மற்றும் குழந்தையை வாலாஜாவில் உள்ள அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.