ADDED : ஆக 09, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ஆண்டு ஆய்வு கூட்டம் நடந்தது.
கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:
இந்திய செஞ்சிலுவை சங்கம் பாரம்பரியமான வரலாற்று சிறப்புமிக்க இயக்கம். இந்த இயக்கம் சமூக சேவையை சார்ந்த உன்னத நோக்கத்துடன் செயல்படுகிறது.
இச்சங்கத்தினர், எந்தவொரு திட்டத்தை செயல்படுத்தும் போது, அலுவலர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த செஞ்சிலுவை சங்கம், தற்போது செய்யும் பணியை காட்டிலும், இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட செஞ்சிலுவை சங்க தலைவர் நந்தகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.