/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தாமரை ஏரி ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
/
தாமரை ஏரி ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ADDED : மார் 14, 2025 02:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சியில், தாமரை ஏரியை ஒட்டிய, ஏரி உள்வாய் வகையை சேர்ந்த, 22 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. அதில், ஏழு கடைகள், 16 வீடுகள் இருந்தன.
வருவாய் துறையினர் முன்னிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நீர்வளத்துறையினர் நேற்று அதை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
உணவகம், பஞ்சர் கடை, காய்கறி கடை உள்ளிட்ட ஏழு கடைகள் ஜே.சி.பி., வாயிலாக இடித்து அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு வீடுகளில் வசிப்பவர்களுக்கு, ஒரு மாத காலம் கெடு வழங்கப்பட்டது.