/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நீண்டகால பிரச்னைக்கு விமோசனம் கோளூர் ஏரி வரத்து கால்வாய் சீரமைப்பு
/
நீண்டகால பிரச்னைக்கு விமோசனம் கோளூர் ஏரி வரத்து கால்வாய் சீரமைப்பு
நீண்டகால பிரச்னைக்கு விமோசனம் கோளூர் ஏரி வரத்து கால்வாய் சீரமைப்பு
நீண்டகால பிரச்னைக்கு விமோசனம் கோளூர் ஏரி வரத்து கால்வாய் சீரமைப்பு
ADDED : ஜூன் 03, 2024 04:43 AM

பொன்னேரி: பொன்னேரி அடுத்த கோளூர் கிராமத்தில், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில், 185 ஏக்கர் பரப்பளவில் பாசன ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் தேக்கி வைக்கப்படும் மழைநீரை கொண்டு, ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சம்பா பருவத்தின்போது நெல் பயிரிடப்படுகிறது.
இந்த ஏரியை நம்பி, 735 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த ஏரிக்கு குமரஞ்சேரி, பனப்பாக்கம் கிராமங்கள் வழியாக வரத்து கால்வாய் உள்ளது.
கால்வாய் துார்ந்து போனதால், மழைக்காலங்களில் ஏரிக்கு மழைநீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, விவசாயிகள் கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பொதுப்பணி துறையினரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து, விவசாயிகள் கோரிக்கையின் பயனாக, தற்போது கால்வாய் துார்வாரி சீரமைக்கப்பட்டு உள்ளது. கால்வாயில் இருந்த புதர்கள் அகற்றப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
கோளூர் ஏரி நீர் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம். தற்போது, கால்வாய் துார்வாரப்பட்டு உள்ளதால், இந்த ஆண்டு மழையின்போது, ஏரியில் போதுமான அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.
நீண்டகால பிரச்னைக்கு தற்போது விமோசனம் கிடைத்துள்ளது. விவசாயத்திற்கு பெரிதும் பயனுள்ளதாக இது அமையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.