/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில் தண்டவாளத்தை கடக்க 'லிப்ட்' வசதி கோரிக்கை
/
ரயில் தண்டவாளத்தை கடக்க 'லிப்ட்' வசதி கோரிக்கை
ADDED : ஜூன் 14, 2024 01:14 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையத்தில், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, 'லிப்ட்' அமைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில், ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் ரயில் நிலையத்தில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள், சென்னை, அரக்கோணம் மார்க்கத்தில் பயணித்து வருகின்றனர். இவ்வழியாக, தினமும், 170 புறநகர் மின்சார ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை மார்க்கமாக செல்லும் ரயில்கள், 3வது நடைமேடையிலும், திருத்தணி, அரக்கோணம் செல்லும் ரயில்கள், 4 மற்றும் 5வது நடைமேடையிலும், நின்று செல்கின்றன.
இந்த நடைமேடைகளுக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகள், முதியோர், மேம்பாலத்தில் ஏற முடியாமல், ஆபத்தான முறையில், ரயில் தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர். தற்போது, 2 மற்றும் 3வது நடைமேடையில் மட்டும், 'எஸ்கலேட்டர்' வசதி உள்ளது. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, முதல் மற்றும் ஆறாவது நடைமேடையில், 'லிப்ட்' ஏற்படுத்த வேண்டும்.
மேலும், 4 மற்றும் 5வது நடைமேடையில், 'எஸ்கலேட்டர்' அமைக்க வேண்டும். இதன் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியோர் மற்றும் நோயாளிகளுக்கு வசதியாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.