/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோர புதர்கள் அகற்ற கோரிக்கை
/
சாலையோர புதர்கள் அகற்ற கோரிக்கை
ADDED : செப் 09, 2024 06:56 AM

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம், அத்திமாஞ்சேரிபேட்டையில் இருந்து ஏரிக்கரை வழியாக பொதட்டூர்பேட்டைக்கு தார் சாலை வசதி உள்ளது. நெடுஞ்சாலையான இந்த மார்க்கத்தில் தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. சோளிங்கர், ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த நெசவாளர்கள், வியாபாரிகள், பகுதிவாசிகள் இந்த வழியாக பயணிக்கின்றனர்.
பொதட்டூருக்கு செல்ல இந்த வழி குறுக்கு பாதையாக அமைந்துள்ளது. இந்த வழியை தவிர்த்து பள்ளிப்பட்டு கூட்டு சாலை வழியாக பயணித்தால், 5 கி.மீ., துாரம் சுற்றுப்பாதையாக அமையும்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் புதர் மண்டிக்கிடப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆறு அடி உயரம் வரை செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால், எதிரில் வரும் வாகனங்களை கவனிக்க முடியவில்லை.
ஏரி, குளங்கள், வயல்வெளிக்கு இடையே இந்த சாலை அமைந்துள்ளதால் ஏராளமான சாலை வளைவுகள் உள்ளன. இந்நிலையில் புதரும் சீரமைக்கப்படாமல் கிடப்பதால், விபத்து அபாயம் நிலவுகிறது. சாலையோர புதர்களை அகற்ற வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.