/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புறக்காவல் நிலையம் திறக்க கே.ஜி.கண்டிகையில் கோரிக்கை
/
புறக்காவல் நிலையம் திறக்க கே.ஜி.கண்டிகையில் கோரிக்கை
புறக்காவல் நிலையம் திறக்க கே.ஜி.கண்டிகையில் கோரிக்கை
புறக்காவல் நிலையம் திறக்க கே.ஜி.கண்டிகையில் கோரிக்கை
ADDED : ஆக 09, 2024 11:42 PM
திருத்தணி:திருத்தணி- சோளிங்கர் மாநில நெடுஞ்சாலைய கே.ஜி.கண்டிகையில் பஜாரில், 150க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள், நான்கு திருமண மண்டபங்கள், இரண்டு வங்கிகள், பொது நுாலகம், அரசினர் மேல்நிலைப்பள்ளி, கூட்டுறவு வங்கி, டாஸ்மாக் கடை ஆகியவை இயங்கி வருகிறது.
பஞ்சமுக ஆஞ்சநேயர், சாய்பாபா கோவில் உள்பட அம்மன் கோவில்களும் உள்ளதால் தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கே.ஜி.கண்டிகைக்கு வந்து செல்கின்றனர்.
இதுதவிர கே.ஜி.கண்டிகை பேருந்து நிறுத்தத்திற்கு எஸ்.அக்ரஹாரம், குடிகுண்டா, சிறுகுமி, தாடூர், பீரகுப்பம் உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பயணியர் மற்றும் மாணவர்கள் வந்து திருத்தணி மற்றும் சோளிங்கர் மார்க்கத்திற்கு வந்து செல்கின்றனர்.
மேலும் மேற்கண்ட கிராம மக்கள் தாங்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், வங்கிகளுக்கும் வந்து செல்கின்றனர்.
இதுவரை கே.ஜி.கண்டிகையில், புறக்காவல் மையம் திறக்கப்படவில்லை. இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளதால் அதிகளவில் குடிமகன்கள் வந்து செல்வதால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
இதுதவிர கே.ஜி.கண்டிகை பகுதியில் அடிக்கடி தகராறு மற்றும் திருட்டு சம்பங்கள் நடந்து வருகின்றன.
எனவே மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநிவாச பெருமாள் மக்கள் நலன் கருதி கே.ஜி.கண்டிகையில் புறக்காவல் மையம் அமைத்து, போலீசார், 24 மணி நேரமும் தங்கியிருந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.