/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெருவாயல் வாலி தீர்த்த குளம் துார்வாரி பராமரிக்க கோரிக்கை
/
பெருவாயல் வாலி தீர்த்த குளம் துார்வாரி பராமரிக்க கோரிக்கை
பெருவாயல் வாலி தீர்த்த குளம் துார்வாரி பராமரிக்க கோரிக்கை
பெருவாயல் வாலி தீர்த்த குளம் துார்வாரி பராமரிக்க கோரிக்கை
ADDED : ஏப் 27, 2024 12:21 AM

கும்மிடிப்பூண்டி:பெருவாயல் கிராமத்தில் உள்ள வாலி தீர்த்த குளத்தை துார் எடுத்து, பராமரிக்க வேண்டும் என, கிராம பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கவரைப்பேட்டை அடுத்த பெருவாயல் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சவுந்தரவல்லி சமேத திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது.
கோவில் அருகே பரந்து, விரிந்து காணப்படும் வாலி தீர்த்த குளம் உள்ளது. அந்த குளத்தில், வாலி புனித நீராடி, அங்குள்ள சிவனை வழிபட்டதால், சிவனை திருவாலீஸ்வரர் என்றும், குளத்தை, வாலி தீர்த்தம் என்றும் பெயர் கொண்டு அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அந்தக் குளத்தில், கழிவுகள், குப்பை கலந்து அசுத்தமாகி, பெரும்பாலான பகுதிகள் துார்ந்து போயுள்ளன. ஆன்மிக அன்பர்களால் பெரிதும் போற்றப்படும் வாலி தீர்த்த குளம் தற்போது பரிதாபமான நிலையில் உள்ளது.
குளத்தை துார் எடுத்து, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும், பெருவாயல் கிராமத்தின், முக்கிய நீராதாரமான அந்த குளத்தை, முறையாக பராமரிக்க வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியம், மணவூர் ஊராட்சியில் திருத்தீஸ்வரர் கோவில் எதிரே அமைந்துள்ளது ஊரணி குடிநீர் குளம். 700 ஆண்டுகள் பழமையான இந்த குளம் மணவூர் சுற்றுவட்டார பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்ததோடு, நிலத்தடி நீர் மட்டத்தை சீராக வைத்திருக்க காரணமாக இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குளத்தின் படிகள் உடைந்ததால் குளத்து நீரை மக்கள் பயன்படுத்தாமல் தவிர்த்து வந்தனர். பயன்பாடு குறைந்ததால் குளத்தில் செடிகள் முளைத்து தற்போது மழை பெய்தாலும் நீர் தேங்குவதில்லை. பழமை வாய்ந்த இந்த ஊரணி குடிநீர் குளம் பாழடைந்து வருவது தடுக்கவும் குளத்தை சீரமைக்கவும் வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

