/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில் நிலையம் - பூங்கா நகர் தடத்தில் மினி பேருந்துகள் இயக்க கோரிக்கை
/
ரயில் நிலையம் - பூங்கா நகர் தடத்தில் மினி பேருந்துகள் இயக்க கோரிக்கை
ரயில் நிலையம் - பூங்கா நகர் தடத்தில் மினி பேருந்துகள் இயக்க கோரிக்கை
ரயில் நிலையம் - பூங்கா நகர் தடத்தில் மினி பேருந்துகள் இயக்க கோரிக்கை
ADDED : ஆக 14, 2024 09:47 PM
திருவள்ளூர்:சென்னை புறநகர் பகுதிகளில், 'மினி பேருந்து' இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை நகரை ஒட்டி அமைந்துள்ள திருவள்ளூர் நகரம், மாவட்ட தலைநகராக திகழ்கிறது. இந்நகரை ஒட்டி ராஜாஜிபுரம், பூங்கா நகர், காக்களூர், புட்லுார் உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன.
இப்பகுதிகளில் பல்வேறு குடியிருப்புகளில், 15,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இருப்பினும், இப்பகுதிகளுக்கு சென்று வர, பொது போக்குவரத்து வசதி இல்லை.
இப்பகுதிகளில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கானோர், வேலை, கல்வி நிமித்தமாக திருவள்ளூர் ரயில் நிலையம், பேருந்து நிலையத்திற்கு சென்று வருகின்றனர்.
பேருந்து வசதி இல்லாததால் இருசக்கர வாகனத்திலும், ஆட்டோக்களிலும் தான் சென்று வருகின்றனர். எனவே, மக்கள் வசதிக்காக 'மினி பேருந்து' இயக்க பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து பூங்கா நகர் மக்கள் கூறியதாவது:
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்பவபர்களின் வசதிக்காக, திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து ராஜாஜிபுரம், பூங்கா நகர் வழியாக பேருந்து நிலையம், ஆட்சியர் அலுவலகம் வரை மினி பேருந்துகள் இயக்க வேண்டும்.
இப்பகுதியில் பிரசித்தி பெற்ற சிவ விஷ்ணு கோவில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், வீர ஆஞ்சநேயர் கோவில் மற்றும் புட்லுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்கள் உள்ளன.
இக்கோவில்களை இணைக்கும் வகையிலும் மினி பேருந்துகள் இயக்கினால் பக்தர்களுக்கும், குடியிருப்புவாசிகளுக்கும் பயனாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.