/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி ஜி.என்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
/
கும்மிடி ஜி.என்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
கும்மிடி ஜி.என்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
கும்மிடி ஜி.என்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
ADDED : மார் 01, 2025 11:55 PM
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ரயில்வே மேம்பாலம் முதல், கும்மிடிப்பூண்டி, பஜார் வீதி வழியாக கன்னியம்மன் கோவில் ரயில்வே மேம்பாலம் வரையிலான, 6.6 கி.மீ., தூரமுடைய ஜி.என்.டி., சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ளது.
இச்சாலையில், கன்னியம்மன் கோவில் மேம்பாலம் முதல் தேர்வழி சாலை சந்திப்பு வரையிலான 4.6 கி.மீ., சாலையின் இருபுறமும், எல்லை நிர்ணயம் செய்து கால்வாய்கள் அமைக்கப்பட்டன. ஆனால், மீதமுள்ள 2 கி.மீ., சாலை அமைந்துள்ள சாமிரெட்டிகண்டிகை பகுதியில் எல்லை நிர்ணயம் செய்யப்படவில்லை.
போக்குவரத்து நெரிசல் காரணமாக, இரு மாதங்களுக்கு முன் ஜி.என்.டி., சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது, சாலையின் இருபுறமும் கால்வாயை எல்லையாக கொண்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஆனால், எல்லை நிர்ணயம் செய்யப்படாத சாமிரெட்டிகண்டிகை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. அந்த பகுதியில் ஏராளமான சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன.
மேலும், பஜார் பகுதியில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள், சாமிரெட்டிகண்டிகை ஜி.என்.டி., சாலையோரம் இடம் மாறி வருவதாக பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அதனால், உடனடியாக சாமிரெட்டிகண்டிகை பகுதியில் சாலையின் இருபுறமும் எல்லை நிர்ணயம் செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அந்த பகுதியில் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.