/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளி எதிரே பாழடைந்த கட்டடம் அகற்ற கோரிக்கை
/
அரசு பள்ளி எதிரே பாழடைந்த கட்டடம் அகற்ற கோரிக்கை
ADDED : ஜூலை 07, 2024 01:19 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றி யம், அத்திமாஞ்சேரிபேட்டையில் சோளிங்கர்செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அரசுமேல்நிலை பள்ளி மற்றும் அரசு மகளிர் உயர்நிலை பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், 1,200 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
பள்ளி வளாகத்திற்கு எதிரே, பயணியர் நிழற்குடை உள்ளது.
அதையொட்டி மகளிர் சுயஉதவி குழு கட்டடம் மற்றும் பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்ட கால்நடை மருந்தக கட்ட டம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
பயணியர் நிழற்குடையில் மாணவர்கள் காத்திருந்து பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த பயணியர் நிழற்குடையில் இருக்கை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.
இந்த நிழற்குடை, 1,200 மாணவ, மாணவியருக்கு போதுமானதாக இல்லை.
இந்நிலையில் இந்த நிழற்குடையை ஒட்டி பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்ட கால் நடைமருந்தக வளாகத்தை இடித்து அகற்றி புதிய பயணியர் நிழற்குடையை அடிப்படை வசதிகளுடன் கட்ட வேண்டும் எனபகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.