/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் ரயில் நிலையம் வரை வெளியூர் பேருந்துகளை இயக்க கோரிக்கை
/
திருவள்ளூர் ரயில் நிலையம் வரை வெளியூர் பேருந்துகளை இயக்க கோரிக்கை
திருவள்ளூர் ரயில் நிலையம் வரை வெளியூர் பேருந்துகளை இயக்க கோரிக்கை
திருவள்ளூர் ரயில் நிலையம் வரை வெளியூர் பேருந்துகளை இயக்க கோரிக்கை
ADDED : ஆக 12, 2024 07:04 AM
திருவள்ளூர்: சென்னை- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் திருவள்ளூர் வழியாக, தினமும் 180 புறநகர் மின்சார ரயில், 22 விரைவு ரயில்கள் நின்று செல்கின்றன.
திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கல்வி, பணி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பணிக்காக, தினமும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் ரயிலில் பயணிக்கின்றனர்.
திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தோர், தினமும் திருவள்ளூர் பேருந்து நிலையம் வந்து, பின் ரயில் நிலையம் செல்ல ஆட்டோ அல்லது பேருந்துகளை பயன்படுத்த வேண்டி உள்ளது.
குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுவதால், பொதுமக்கள் ஆட்டோவில், நபர் ஒருவருக்கு 20 ரூபாய் கட்டணம் செலுத்தி பயணிக்கின்றனர்.
தற்போது, திருத்தணி, கும்மிடிப்பூண்டி ஊத்துக்கோட்டை, பொன்னேரி, உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் திருவள்ளூர் பேருந்து நிலையத்திற்கு வருகின்றன.
இப்பேருந்துகளில் பயணம் செய்வோரில், ரயில் நிலையம் செல்வோர், வேறொரு பேருந்து அல்லது ஆட்டோவில் செல்ல வேண்டி உள்ளது.
இதனால், கால விரயம், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும், திருவள்ளூர் ரயில் நிலையம் வரை நீட்டிக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

