/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சின்னம்மாபேட்டை சந்திப்பில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
/
சின்னம்மாபேட்டை சந்திப்பில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
சின்னம்மாபேட்டை சந்திப்பில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
சின்னம்மாபேட்டை சந்திப்பில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
ADDED : ஆக 09, 2024 01:04 AM

திருவாலங்காடு:கனகம்மாசத்திரம் -- தக்கோலம் மாநில நெடுஞ்சாலை, 18 கி.மீ., தூரம் உள்ளது. இச்சாலையை ஒட்டி முத்துக்கொண்டாபுரம், கூர்மவிலாசபுரம், சின்னம்மாபேட்டை, பெரியகளக்காட்டூர் என, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலை வழியாக பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றன.
அவ்வாறு செல்லும் வாகனங்களின் வேகம் குறைக்கவும், விபத்துகளை தடுக்கவும் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பள்ளி போன்ற இடங்களில், நெடுஞ்சாலைத்துறையினர் வேகத்தடை அமைத்துள்ளனர்.
இந்நிலையில் திருவாலங்காடு ரயில் நிலையம் அமைந்துள்ள சின்னம்மாபேட்டை ஜங்ஷன் பகுதியில் வேகத்தடை இல்லாமல் உள்ளது.
இந்த ஜங்ஷன் வழியாக அரக்கோணம், திருவள்ளூர், காஞ்சிபுரம் செல்லும்பிரிவு சாலை உள்ளது. எனவே 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருக்கும் இச்சாலையில் ஆங்காங்கே வளைவும் உள்ளது.
இதை அறியாமல் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் தாமாக விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தடுக்க இச்சாலையில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.