ADDED : மார் 05, 2025 02:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு,:பள்ளிப்பட்டு ஒன்றியம், கீழப்பூடியில் இருந்து பொதட்டூர்பேட்டை செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. வாணிவிலாசபுரம் கூட்டுச்சாலையில் பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, கீழப்பூடி, வாணிவிலாசபுரம் என, நான்கு சாலைகள் இணைகின்றன.
இதில், டாஸ்மாக் கடைக்கு செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இந்த சாலை வழியாக சென்றால் மட்டுமே பொதட்டூர்பேட்டை புறவழி சாலையை அடைய முடியும். இங்கு, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த வழியாக ஏராளமான டிப்பர் லாரிகளும் இரவு பகலாக கடந்து செல்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, இந்த முனையத்தில் பேரிகார்டு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.