/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போந்தவாக்கம் அரசு பள்ளி எதிரில் சாலை தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
/
போந்தவாக்கம் அரசு பள்ளி எதிரில் சாலை தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
போந்தவாக்கம் அரசு பள்ளி எதிரில் சாலை தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
போந்தவாக்கம் அரசு பள்ளி எதிரில் சாலை தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
ADDED : ஜூலை 09, 2024 11:40 PM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில், 4 கி.மீட்டர் துாரத்தில் இணைப்பு சாலை வழியே உள்ளது போந்தவாக்கம் ஊராட்சி. இங்கு, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு செல்வது. இங்கு அரசு தொடக்கப்பள்ளி உள்ளது.
இங்கு படித்த மாணவர்கள் மேற்படிப்பை தொடர போந்தவாக்கத்தில் இருந்து ஒரு கி.மீட்டர் துாரத்தில் ஊத்துக்கோட்டை- -திருவள்ளூர் சாலை மார்க்கத்தில் வலதுபுறம் உள்ள அரசு மேனிலைப்பள்ளிக்கு செல்கின்றனர். போந்தவாக்கம் மட்டும் இன்றி பெரிஞ்சேரி, கச்சூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் இப்பள்ளிக்கு செல்கின்றனர்.
இப்பள்ளியை ஒட்டி, கச்சூர் ஏரியில் இருந்து வேளகாபுரம் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் உள்ளது. மழைக்காலங்களில் ஏரியில் இருந்து வெளியேறும் நீர், கால்வாயை தாண்டி பள்ளிக்குள் புகுந்து விடுகிறது. மேலும், இந்த கால்வாய் ஊத்துக்கோட்டை -- திருவள்ளூர் சாலையின் வழியே செல்கிறது. சாலையின் மேல் தண்ணீர் செல்லாதவாறு கீழ்பகுதியில் கல்வெட்டு அமைக்கப்பட்டு உள்ளது.
கல்வெட்டு அமைந்துள்ள பகுதியில் சாலையில் இருந்து கால்வாய் பள்ளத்தில் உள்ளது.
இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், மாணவர்கள் தவறி கீழே விழுந்தால் பலத்த காயம் அடைவர். எனவே, இப்பகுதியில் சாலையின் இரண்டு பக்கமும் தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.