/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காய்கறி பையில் குட்கா கடத்தியவருக்கு 'காப்பு'
/
காய்கறி பையில் குட்கா கடத்தியவருக்கு 'காப்பு'
ADDED : மார் 14, 2025 11:11 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பஜார் பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது, ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியில் இருந்து, பெரிய பைகளுடன், இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அவரது பைகளில், காய்கறியுடன், 26 கிலோ குட்கா பாக்கெட்டுகளை மறைத்து கடத்தியது தெரியவந்தது. இருசக்கர வாகனத்துடன் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், பெரம்பலுார் மாவட்டம், மேலமாத்துாரைச் சேர்ந்த முருகானந்தம், 49, என்பவரை கைது செய்தனர்.
திருத்தணி
ஆந்திராவில் இருந்து குட்கா பொருட்கள் தமிழகத்திற்கு கடத்தி வருவதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தமிழக எல்லை பகுதியில் உள்ள பொன்பாடி சோதனைச்சாவடி அருகே, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்தில் சோதனை செய்தனர். அப்போது, சென்னை வண்டலூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 27, என்பவரின் உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில், 25 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. கோபாலகிருஷ்ணனை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.