/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நள்ளிரவில் கிணற்றில் விழுந்த இளைஞர் மீட்பு
/
நள்ளிரவில் கிணற்றில் விழுந்த இளைஞர் மீட்பு
ADDED : மே 14, 2024 10:57 PM

சோழவரம்:சோழவரம் அடுத்த காந்திநகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு, ஆண் ஒருவர் அங்குள்ள, 30 அடி ஆழ உறை கிணறு ஒன்றில் தவறி விழுந்தார்.
இளைஞரின் சத்தம்கேட்டு, அருகில் வசிப்பவர்கள் அங்கு வந்தனர். தண்ணீர் குறைவாக இருந்த நிலையில், தத்தளித்தபடி இளைஞர் காத்திருப்பது தெரிந்தது.
குடியிருப்புவாசிகள் தகவலின்படி செங்குன்றம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் அங்கு விரைந்தனர்.
கயிற்றின் உதவியுடன் கிணற்றில் விழுந்த இளைஞரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மேலே கொண்டு வந்தனர். சிறிய காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் குறித்து சோழவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், செங்குன்றம் அடுத்த பெத்துார் பகுதியை சேர்ந்த கீர்த்திவாசன், 22 என்பதும், இவர் மீது ஆவடி சரக காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிந்தது.
நள்ளரவில் எதற்காக காந்திநகர் பகுதிக்கு வந்தார்? போதையில் தவறி கிணற்றில் விழுந்தாரா என சோழவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

